மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தொடர்ந்து அவர் கூறுகையில்;
இன்று ஆசிரியர்கள் தின விழா மற்றும் மிலாது நபி முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மதுரையில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ராமகிருஷ்ணன் சந்தேகத்திற்கு இடமாக உயிரிழந்த சம்பவம் குப்பை கிடங்கில் அவர் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கிறார். இந்த மரணம் தற்கொலை அல்ல படுகொலை என்று சந்தேகத்தின் நிலையில் உள்ளது.
ஆகவே அவருடைய மனைவி உயர் நீதிமன்ற கிளைகள் வழக்கு தொடுத்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உடற்கூறாய்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக வந்திருக்கிறேன் அந்த கொலையில் கொள்ளைக்கான முயற்சி இருப்பதாக தெரிகிறது எனவே வழக்கமான காவல்துறை விசாரிக்காமல் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுகிறோம் அந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
ஜிஎஸ்டி வரி மறு சீரமைப்பு வரவேற்கத்தக்க வகையில் இல்லை அமெரிக்க பேரரசு நம்மீது 50 சதவீத வரி விதித்தது தொடர்பாக ஒரு மடைமாற்றம் செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு பிரதமர் முயற்சிக்கிறார் என்ற விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. 28% ஆக இருந்த வரி 40 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்ட நிலையும் உள்ளது.
இதனால் சிறு குறு நடுத்தர தொழில் செய்யக்கூடியவர்கள் சிறு வணிகர்கள் எளிய மக்கள் பெரிதும் பயன்படுத்த போவதில்லை. என வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.
தேசிய கூட்டணியிலிருந்து முக்கிய தலைவர்கள் வெளிவருவது அதிமுகவில் அனைவரும் ஒன்று இணைய வேண்டும் செங்கோட்டையன் கருத்து குறித்த கேள்விக்கு:
அதிமுக கட்சியின் உட்கட்சி விவகாரம் அதிமுக ஒன்றிணைய வேண்டும் செங்கோட்டையன் போன்றவர் மூத்த தலைவர்கள் கோரிக்கையில் எழுப்பி உள்ளார்கள் அவர் இன்றும் மனம் திறந்து பேச போவதாக சொன்னார் ஆனால் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை அவரது பேட்டியில் இருந்து தெரிய வருகிறது யார் யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்பதை இன்னும் அவர் வெளிப்படையாக சொல்லலாம் என்றாலும் கூட அது அவர்களின் உட்கட்சி விவகாரம் அதிமுகவை ஒரு திராவிட இயக்கம் பெரியார் இயக்கம் என்ற முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரிதும் மதிக்கிறது.
