விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் அய்யனார் பேச முயன்றார். அப்போது வளவனூர் அருகே உள்ள குமாரகுப்பம் – நறையூர் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பாட்டில் உள்ள நீர்நிலை, ஓடை மற்றும் சுடுகாட்டு பாதை உள்ளிட்டவர்களை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க அவர் முயன்றார்
ஆனால் கூட்டத்தில் அதிகாரிகள் பேச அனுமதிக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனால் விவசாயிகள் கூட்ட அரங்கில் அமர்ந்து திடீர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து கூட்டத்தை நிறுத்தினர்.
பின்னர் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் வளாகம் நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற வேண்டும் ஆக்கிரமிப்பிற்கு துணை போகும் வருவாய்த்துறையினர் மற்றும் வளவனூர் செயல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முன்வைத்து தருணா போராட்டத்தில் ஈடுபட்டனர் காவல்துறையினர் அவரிடம் சமாதானம் பேசி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர் அதன் காரணமாக ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.













