திருவாரூரில்  ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அளிக்காத மத்திய அரசை கண்டித்தும் நெல் கொள்முதல் ஈரப்பத அளவினை அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகி விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருவாரூர் மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கண்டித்தும் கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் வாரை பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் புலிவலம்தேவா, சேகர் கலியபெருமாள், நாடாளுமன்ற உறுப்பினர் வை செல்வராஜ் ,முன்னாள் அமைச்சர் மதிவாணன், நாகை மாவட்ட கழக செயலாளர் கொளதமன், மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் நிவேதாமுருகன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ,திருவாரூர் மாவட்ட தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ் S.M.B.துரைவேலன் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் நிர்வாகிகள் மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளை சார்ந்த மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Exit mobile version