மன்னார்குடி அருகே மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் அரக்கனை வதம் செய்த காட்சி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில் பழமையான முருகன் ஆலயமாகும் . இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முக்கிய நிகழ்வான சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி கந்த சஷ்டி விழாவின் நிறைவாக சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோவிலில் இருந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்தார் அதனைத் தொடர்ந்து கிராமத்தின் பொது இடத்தில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது வாகனத்தில் வந்த சூரபத்மன் பல்வேறு முகங்களை காட்டி முருகப்பெருமானின் முன்பு எழுந்தருளிய போது வேல் கொண்டு சூரசம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகா முருகா என கோஷங்களை எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.

Exit mobile version