திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் அறிவிப்பு – துணை காவல் கண்காணிப்பாளராக இருந்து, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த கரூண் கரட் அவர்களை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்தது. அவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து , சதீஷ்குமார் என்பவரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தமிழக அரசு நியமித்தது. இதற்கு முன் சதீஷ்குமார் திருவண்ணாமலை மாநகரத்தில் காவல் துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். துணை கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த சதீஷ்குமாரை திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்துள்ளது தமிழக அரசு. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய காவல் சேவை அதிகாரியாக பொறுப்பேற்ற அவர் நான்கு ஆண்டுகளுக்குள் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
