மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது இக்கோவிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்டை விரட்ட தளங்களில் ஒன்றாக திகழ்கிறது வருடம் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஒரே ஸ்தலமாகும். மேலும் பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவிலுக்கு மலேசியா நாட்டின் இந்திய காங்கிரஸ் தேசிய தலைவரும் முன்னாள் சபாநாயகரும் எய்ம்ஸ் மருத்துவக் பல்கலைக்கழகம் வேந்தருமான டாக்டர். விக்னேஸ்வரன் தனது 60 வயது பூர்த்தி அடைவதை முன்னிட்டு மனைவி ஸ்ரீசுசிடா மற்றும் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் தம்பதியினருக்கு கோவில் மண்டபத்தில் சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் செய்து மாங்கல்ய தாரனம் செய்துக்கொண்டனர். தொடர்ந்து கள்ளவாரண விநாயகர், அமிர்தகடேஸ்வரர், கால சம்கார மூர்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்தார். டாக்டர். விக்னேஸ்வரனிடம் குடும்பத்தினர் காலில் விழுந்து வணங்க ஆசிபெற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

















