மயிலாடுதுறையில் சீரமைப்புப் பணிக்காக சாரங்கபாணி மேம்பாலம் மூடப்பட்டதால் மாப்படுகை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறையில் கும்பகோணம் பிரதான சாலையில் உள்ள ரயில்வே ஜங்ஷனை கடப்பதற்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாலத்தின் மேற்பரப்பில் உள்ள சாலை பழுதுநீக்கும் பணி கடந்த 3ஆம்தேதி 3 மாதங்களுக்கு இந்த சீரமைப்புப் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்வே மேம்பாலம் மூடப்பட்டது. மாற்றுவழியாக கல்லணை-பூம்புகார் சாலையை பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், கல்லணை-பூம்புகார் சாலையில் மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படாததால், மாப்படுகை ரயில்வே கேட்டை கடந்து செல்வதில் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இந்நிலையில், கூடுதல் போக்குவரத்து காரணமாக மாப்படுகையில் ரயில்வே கேட்டின் இருபுறங்களிலும் சுமார் 3 கி.மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக வாகனங்களில் காத்திருந்து கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பயன்பாட்டில் இல்லாத பழைய சாலையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரி இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் இயற்கை விவசாயி ராமலிங்கம் என்பவர் அளித்த மனுவில் மாப்படுகை சாலையில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி காவலர்களை சுழற்சி முறையில் நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும், மயிலாடுதுறை சாரங்கபாணி மேம்பாலம் அருகிலேயே ஏற்கெனவே பாலம் கட்டுவதற்கு முன்பு இருந்த தரைவழிப்பாதையை மீண்டும் செப்பனிட்டு, ரயில்வே தண்டவாளங்களை கடந்து அந்த வழியில் ஆட்டோ, இருச்சகரவாகனங்கள் அவசர ஊர்திகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்கள், ரயில் பயணிகள் சங்கம், 21 கிராம பஞ்சாயத்தார்கள் சார்பாக நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்துள்ளேன்

Exit mobile version