கரூர் : கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கரூர் நிகழ்விற்கு பிறகு திரும்பிய நடிகர் விஜய், செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்காமல் சென்றார். ஆனால் தனது சமூக வலைதள பக்கத்தில் உயிரிழந்தோருக்கும் குடும்பத்திற்கும் இரங்கல் தெரிவித்து, தவெக சார்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்தச் சூழலில் சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாக “ஐ ஸ்டான்ட் வித் விஜய்” என பலர் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அதில் நடிகர் சஞ்சீவ், தனது நண்பரான விஜய்க்கு ஆதரவாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டார்: “உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்தது போதே, நீ சிங்கம் தான்.” இந்த பதிவு விரைவாக வைரலாகி வருகிறது.