சங்கம் முக்கியம் இல்ல சமோசா தான் முக்கியம், கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு 20 சதவீதம் வழங்கிட வேண்டும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் கருணைத் தொகையாக மாதம் தோறும் 5000 ரூபாய் வழங்க வேண்டும், முதல்வர் மருந்தகத்தில் கட்டாயம் ஆயிரம் ரூபாய் விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவை கைவிட வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தோஷங்களை எழுப்பினர்

அப்போது 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய சமயத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு சமோசா வழங்கப்பட்ட நிலையில் கோஷங்களை எழுப்புவதில் பணியாளர்கள் ஆர்வம் காட்டாமல் சமோசாவை சாப்பிட்டு ருசித்துக் கொண்டிருந்த காட்சியானது சீப்பலைகளை ஏற்படுத்தியதுடன் வந்திருப்பது கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டமா அல்லது பொதுவெளியில் சமோசாவை யார் முதலில் சாப்பிடுவது என்பதில் போட்டியா என்ற கேள்வி எழுப்பிய நிலையில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்றனர்

Exit mobile version