மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சம்பா கட்டளை பகுதியில் கிட்டத்தட்ட 50 ஏக்கர் விளை நிலம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பெண் கள் அதிகளவில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு கடந்த மாதம்
சம்பா சாகுபடிக்காக, விதை நெல் நாற்றங்கால் விட்டு,பின் னர் அதனை நடவு செய்தனர்.கடந்த மாதம் பெய்த மழையால் ஓரளவுக்கு பாதிக்கப்பட்டிருந்த நெற்ப யிர்களை உரங்களிட்டு மீட்டு கொண்டு வந்த நிலையில் தற் போது டிட்வா புயல் காரணமாக பெய்த மழையால் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக பயிர் கள் முற்றிலும் அழுகிவிட்ட தாக பெண் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ‘சம்பா கட்டளை பகுதியில் 50 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்தோம். புயல் மழையால் தற்போது பயிர் களே இல்லாமல் போய்விட்டது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.
