மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விற்பனை மையம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் உணவுப் பொருள்கள் விற்பனை மையம் திறப்பு:- மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் திறந்து வைத்தார்;. இந்த விற்பனை மையத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள தேன், ஊறுகாய், பழச்சாறு வகைகள், ஸ்ட்ராபெரி ஜாம், ஜெல்லி உணவுப் பொருட்கள், உழவர்களால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், மலர்ச்செடிகள் மற்றும் காய்கறி விதைகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து, பார்வையிட்டு அலுவலக வளாகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக இம்மையம் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திலீப், வேளான் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Exit mobile version