மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மன்னார்குடி மக்களுக்காக சேவையாற்றுவேன் என மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் எஸ் காமராஜ் உருக்கமான பேட்டி…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 இல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி ஆர் பி ராஜா, அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் மற்றும் தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் இருந்தே, திமுக வேட்பாளர் டி ஆர் பி ராஜாவுக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் காமராஜர்க்கும் இடையே கடுமையான போட்டி இருந்து வந்தது. இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் காமராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த டி ஆர் பி ராஜா வை 1566 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் எஸ் காமராஜ் க்கு, அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான காமராஜ் இனிப்புகள் ஊட்டி உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் எஸ் காமராஜ் கூறும் போது….
இதுவரை இருந்த எம்எல்ஏக்களை போல் இல்லாமல், மன்னார்குடியிலேயே தங்கி இருந்து, மன்னார்குடி மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன், மன்னார்குடி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன் என உணர்ச்சிகரமாக கூறினார்.
