டிரம்ப் எச்சரிக்கையை புடின் புறக்கணிப்பு : உக்ரைன் சிறைச்சாலையில் ரஷ்யா தாக்குதல்

உலகம் முழுவதும் போர் நிறைவடையவேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிறைக்கைதிகள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் அடங்குகிறார்கள்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபருமான டொனால்டு டிரம்ப், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுக்கு 10 முதல் 12 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். “இல்லையெனில், கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்,” என அவர் கூறினார்.

இதனை அலகிலிட்ட புடின் தலைமையிலான ரஷ்யா, உக்ரைனில் தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் சப்போரியா மாகாணத்தில் உள்ள பிலன்கிஸ்கா நகரில் உள்ள ஒரு சிறைச்சாலையும் மருத்துவமனையும் ட்ரோன் மூலம் குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததும், 80 பேர் படுகாயமடைந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மத்திய உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் நடந்த ஏவுகணை தாக்குதலில் மூன்று மாடி கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இவை அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களே என உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version