மயிலாடுதுறையில் கும்பகோணம் பிரதான சாலையில் காவேரிநகர் பகுதியில் ரயில்வே ஜங்ஷன் உள்ளது. இந்த வழிதடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காவேரிநகர் ரயில்வே ஜங்ஷன் சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கும்பகோணம் செல்லும் மார்க்கத்திற்கு சாரங்கபாணி நினைவு மேம்பாலம், மற்றும் மாப்படுகை ரயில்வேகேட் பகுதியில் உள்ள கல்லணை சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மாப்படுகை ரயில்வே கேட்டில் மயிலாடுதுறை-விழுப்புரம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் நேரங்களில் மட்டும் கேட் மூடப்படுவதொடு ஜங்ஷனில் ரயில் இஞ்சின் மாற்றுவதற்கான டிராக் மாப்படுகை கேட் பகுதி வரையில் இருப்பதால் தினமும் காலை, மாலை நேரங்களில் ரயில் இஞ்சின் மாற்றத்திற்காக மாப்படுகை ரயில்வே கேட் 40 முறை மூடப்படுவது வழக்கம். இதனால் மயிலாடுதுறை-பூம்புகார் கல்லணை சாலையில் மாப்படுகை ரயில்கேகேட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இன்று முதல் தொடங்கப்படவுள்ளதால் போக்குவரத்து தடை செய்ய திட்டமிப்பட்டு போக்குவரத்து இன்று தடைசெய்யப்பட்டது. மாற்று பாதையாக மாப்படுகை ரயில்கேட் பகுதி சாலையை பயன்படுத்த அறிவுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த் உத்தரவிட்டார். இன்று சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலம் மூடப்பட்டதால் கும்பகோணம் வழிதடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாப்படுகை ரயில்வே கேட் வழியாகத்தான் சிதம்பரம், பூம்புகார், திருவாரூர் மாக்கங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில் இஞ்சின் மாற்றுவதற்காக மாப்படுகை ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அப்பகுதியில் இரண்டு பக்க சாலைகளிலும் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் வரிசைகட்டி நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்’றாக ஊர்ந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வரகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பராமரிப்பு பணியை தீபாவளி பண்டிகைக்கு பின் மேற்கொள்ள வேண்டும் என்றும், மாப்படுகை பகுதியில் ரயில் இஞ்சின் கேட் மூடி திறக்கப்படும் சிக்னல் நேரத்தை குறைத்து ரயில்வே அதிகாரிகள் உரிய அனுமதி வழங்கி உடனடியாக நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
