திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 90 நாட்களில் ஒரு லட்சம் நபர்களுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு என்ற நோக்கத்தின் அடிப்படையில் நேற்று திருப்பத்தூர் , IVN ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, கெஜல்நாயகம்பட்டியில் தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் 16 அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 5 தனியார் பள்ளி மாணவி மாணவர்கள் கலந்து கொண்டனர் மொத்தம் 4200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட்டது. அதில் பள்ளி பள்ளி மாணவ, மாணவிகள் தனது பெற்றோர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது பள்ளிக்கு வரும்போது எந்த திசையை நோக்கி நடந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும், சாலையை எப்படி கடக்க வேண்டும், 18 வயது நிரம்பாத மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டக்கூடாது, 18 வயது நிரம்பியதும் தான் முறைப்படி வாகனம் ஓட்ட உரிமம் (லைசன்ஸ்)வாங்கிய பிறகுதான் வாகனம் ஓட்டவேண்டும். எந்த வேகத்தில் வாகனம் ஓட்டவேண்டும், இரண்டுசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், கார் ஓட்டும் போது சீட் பெல்ட் போடாமல் ஓட்டக்கூடாது, நம் உயிர் எவ்வளவு முக்கியமானது அதே போல் அடுத்தவர்கள் உயிரும் முக்கியமானது, பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டவேண்டும் என்றும், தனது விரிவான விளக்கம் அளித்து காணொளி மூலம் பள்ளி மாணவ, மாணவி செல்வங்களுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் திருப்பத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி,SJHR பிரிவு உதவி காவல் ஆய்வாளர்கள் வீரம்மாள் ரூபி கவிதா பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் தனியார், அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி பேரூந்து ஓட்டுநர், உதவியாளர்கள் பொதுமக்கள், என ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
-
By Satheesa

Related Content
திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை
By
Satheesa
May 15, 2026
TVKதலைவர் விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல்
By
Satheesa
May 15, 2026