சீர்காழியில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளருக்கு நிவாரணம் கோரி சாலை மறியல்

சீர்காழியில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளருக்கு நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்க கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கோபால சமுத்திரம் ஊராட்சி புத்தூர் கிராமத்தில் இன்று காலை சிதம்பரத்திலிருந்து நாகை நோக்கி அதி வேகமாக சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் சங்கர் மற்றும் சாலையோரம் தூய்மை பணி செய்து கொண்டிருந்த ஊராட்சி தூய்மை பணியாளர் சரண்யா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் இதுகுறித்து ஆணைக்காரன் சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து அரசு பேருந்து ஓட்டுநர் பாக்கியராஜ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இந்நிலையில் பணியின் போது உயிரிழந்த தூய்மை பணியாளர் சரண்யாவிற்கு இழப்பீடாக ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் அவரது குடும்பத்தில் உள்ள கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் ராமன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இறந்த சரண்யாவின் உறவினர் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் மற்றும் சீர்காழி வட்டாட்சியர் கோரிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.

Exit mobile version