ரம்ஜான் முன்னிட்டு சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தில் பொதுமக்களுக்கு தேவையான அரிசி,மளிகை பொருட்கள் தொகுப்பு அதிமுக சார்பில் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தில் அமைந்துள்ள ஜாமிஆ மஸ்ஜித் அல் மஸ்ஜிதில் கதீம் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி இப்தார் நோன்பு இருக்கும் இஸ்லாமியர் மக்களுக்கு பிரியாணி செய்வதற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உட்பட 10 பொருட்கள் அடங்கிய பக்கெட் தொகுப்பு வழங்கும் நிகழ்வு பஷிர்முகமது தலைமையில் நடைபெற்றது.இதில் அதிமுக அம்மா பேரவை மாநில துணை செயலாளர் மார்கோனி பங்கேற்று 40 குடும்பங்களுக்கு தேவையான அரிசி,மளிகை தொகுப்பு பக்கெட்டை வழங்கினார்.மேலும் பள்ளிவாசலுக்கு தேவையான உதவிகளை செய்துதரப்படும் என்று கூறினார்.இதில் நகர செயலாளர் சுரேஷ், அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் பாலமுருகன்,ராஜேஷ்,கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
