புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான புரட்சித்தலைவி செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினம் இன்று  அனுசரிக்கப்பட்டது. நிலக்கோட்டை நாள் ரோட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு மறைந்த தலைவிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு, நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி ஆகியோர் தலைமை வகித்தனர். நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தேன்மொழி சேகர் அவர்கள் முன்னிலை வகித்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் நிலக்கோட்டை நகர செயலாளர் வி. எஸ். எஸ். சேகர்  அமைய நாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி  சிலுக்குவார் பட்டி முன்னாள் தலைவர் ஜெயசீலன் கணிக்குமார்  மற்றும் திரளான அதிமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள்.

மறைந்த தலைவரின் சாதனைகளை நினைவுகூர்ந்த நிர்வாகிகள், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வழியில் மக்கள் பணியாற்றுவோம் என உறுதி ஏற்றனர். அதிமுகவின் பல்வேறு கிளைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version