SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள், கூடுதல் கால அவகாசம் கேட்டு வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் :-
தேர்தல் ஆணையம் SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தல் பணிகளை அறிவித்திருந்தது. நவம்பர் நான்காம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாட்டில் இந்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த பணிகளில் ஆசிரியர்கள் வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு, வீடு வீடாக சென்று படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து மீண்டும் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டிருந்தனர். இந்தப் பணிகள் காரணமாக கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக தெரிவித்து, வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது. இன்று முதல் SIR பணிகளை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் என்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் வருவாய் துறை பணிகள் மாவட்டத்தில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது
