துணை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதை ரத்து செய்திடக்கோரி திருவள்ளுர் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,
திருவள்ளூர் மாவட்டத்தில் 77 – வது குடியரசுத் தினத்தை ஒட்டி மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு கிராமத்தில் உள்ள நீண்ட நாளாக நிலுவையில் உள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நீட் நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து வரும் நிலையில் தற்போது ஒன்றிய அரசு வருகின்ற கல்வி ஆண்டு முதல் இரண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளான இளங்கலை பிசியோதெரபி (BPT) மற்றும் இளங்கலை தொழில் சிகிச்சை (BOT) ஆகியவற்றில் சேர்ந்து படிக்க நீட் தேர்வு கட்டாயம் என்று தேசிய கூட்டாளிகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் துறை ஆணையம் 2 பிறப்பித்துள்ளது, ஏற்கனவே நீட் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவியர்களை கடுமையாக பாதித்து வரும் நிலையில். துணை மருத்துவப் படிப்புக்கும் நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வருவது கிராமப் புறங்களில் உள்ள மாணவர்களை கடுமையாக பாதிக்கும் கூடும் என்பதால் ஒன்றிய அரசு துணை படிப்புக்கு நீட் முடிவு தேர்வை கட்டாயமாக்கி இருப்பதை ரத்து செய்திடக்கோரி திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் ஊராட்சியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,
