மயிலாடுதுறையில் நடைபெற்ற வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

வருவாய்த்துறை மற்றும் நிலஅளவைத் துறையில் பணியாற்றும் அலுவலர்களை பாதுகாக்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்: மயிலாடுதுறையில் நடைபெற்ற வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட மாநாட்டில் தீர்மானம்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும், வருவாய்த் துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நடைபெற வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், ஜூலை 1ஆம் தேதியை வருவாய்த்துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர், ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Exit mobile version