ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாய மின் இணைப்பு வழங்க மறுத்து அலைக்கழிக்கும் அதிகாரி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயி.. விவசாய மின் இணைப்பு வழங்க மறுத்து.. அலைக்கழிக்கும் அதிகாரி.. விவசாயி வேதனை.. கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.”

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, லாயம் பகுதியில் உள்ள விவசாயி கோபால்சாமி.. தனது மனைவி தாரணி பெயரில் ஆதிச்சமங்கலம் பகுதியில் 10 ஏக்கர், மற்றும் சந்திரசேகரபுரம் பகுதியிலும் 10 ஏக்கர் அளவிற்கு விவசாயம் செய்து வருகிறார்.

இவர் அப்பகுதியில் ஆறு வாய்க்கால்கள் தூர்வார படாத நிலையில்.. விவசாயம் செய்வதற்காக தனது நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளார்..
விவசாயம் செய்ய இலவச மின்சாரம் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்த நிலையில்.. கோபால்சாமி தனது ஆதிச்சமங்கலம் மற்றும் சந்திரசேகரபுரம் உள்ள வயல்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளார்.. அதற்குரிய 10 HP மின் திறன் கொண்ட மோட்டாருக்கான இலவச விவசாய மின் இணைப்பு கோரி… திருவாரூர் மின் வாரிய செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வலங்கைமான் உதவி மின் பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு.. திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளரிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்த பின்..
செயற்பொறியாளர் மின் இணைப்பிற்கான ஆன்லைன் பதிவு செய்யாமல்.. அலைக்கழித்து வருவதாக கோபால்சாமி குற்றம் சுமத்துகிறார்.
இலவச விவசாய மின் இணைப்புக்கு விவசாயிகளிடமிருந்து விளைநிலத்தின் வரைபடம், பத்திரத்தின் நகல் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் சான்று உள்ளிட்டவைகளை விவசாயிகளிடம் இருந்து பெற்று… மின் வாரிய செயற்பொறியாளர்தான் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என நடைமுறை உள்ளபோது..
மின்வாரிய செயற்பொறியாளர் விவசாயிகளையே ஆன்லைன் பதிவு செய்ய நிர்ப்பந்திக்கிறார்.. என்றும்..
மேலும் 04.06.25 அன்று ஆன்லைனில் பதிவு கட்டணமாக 215 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்த சான்றினை செயற்பொறியாளரிடம் கொடுத்த பிறகும்.. அதைப் பெற்றுக் கொண்ட செயற் பொறியாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்வதாக கோபால்சாமி கூறுகிறார். மேலும் தொடர்ந்து 2024 -ஆம் வருடம் முதல் மின் இணைப்புக்கு முயற்சி செய்து வருவதாகவும், எந்தவித நடவடிக்கையும் செயற்பொறியாளர் செய்யாத நிலையில்..
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தேதியிலிருந்து ஆறு வாரத்திற்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என உத்தர பிறப்பித்தும்..
நீதிமன்ற உத்தரவை சிறிதும் மதிக்காமல் திட்டமிட்டு தன்னை அலைக்கழிப்பதாகவும்..காலதாமதம் செய்து இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை.. எனவும் விவசாயி கோபால்சாமி குற்றம் சுமத்துகிறார்..
மேலும்.. இதனால் நேர விரையம், பொருள் விரையம் மற்றும் மன உளைச்சல் ஏற்படுவதாகவும்.. மின்வாரிய செயற்பொறியாளர் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும்.. எனவும் அரசுக்கு விவசாயி கோபால்சாமி கோரிக்கை வைத்தார்.

Exit mobile version