மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு இந்து மக்கள் கட்சியினர் தபால் மூலம் கடிதம் அனுப்பி கோரிக்கை
தேனி மாவட்டம் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பினர்
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கல்வி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் மூன்றாம் மொழியாக இந்தி மொழியை படிக்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு அதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்
மேலும் மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டங்களையும் தமிழ் மொழியில் கற்றுக் கொடுக்க வழிவகை செய்து, இந்து சமய கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும், தமிழகத்தில் நவோதயா பள்ளி செயல்படுவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் தேனி தபால் நிலையத்தின் மூலம் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பி வைத்தனர்
