மயிலாடுதுறையில் அரசு உதவி பெறும் கல்லூரியின் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் அரசு உதவி பெறும் கல்லூரியின் குடியரசு தினவிழா கொண்டாட்டம்..
புல்காமா தாக்குதலை பிரதிபலிக்கும் வகையில் எதிர் தாக்குதலாக இந்திய ராணுவம் சிந்தூர் பிளான் நடைபெற்றதை என்சிசி மாணவர்கள் நடித்து காண்பித்து அசத்தினர்.

மயிலாடுதுறை அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் 77-வது குடியரசு தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான  கே. வெங்கடராமன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து என்.சி.சி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு குடியரசு தின வாழ்த்துரை வழங்கினார். பின்னர்  மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். அதிலும் புல்காமா தாக்குதலை பிரதிபலிக்கும் வகையில் எதிர் தாக்குதலாக இந்திய ராணுவம் சிந்தூர் பிளானில் இந்திய ராணுவத்தின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் என்சிசி மாணவர்கள் சிந்தூர் பிளான் நடப்பதை போன்று நடித்து காண்பித்து அசத்தினர்.
இதில் துணை முதல்வர் டாக்டர் எம். மதிவாணன், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மேஜர் டாக்டர் ஜி.ரவிசெல்வம்,டீன் எஸ். மயில்வாகனன், என்சிசி அதிகாரி டாக்டர் சி.பாலாஜி மற்றும்  பலதுறை பேராசிரியர்கள், என்.எஸ்.எஸ் மற்றும் என்சிசி சார்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version