பொதக்குடி ஹஜ்ரத் நூர்முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்க்காவிற்கு புனரமைப்பு பணிக்காக ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு பல்வேறு தரப்பினர் நன்றி, பாராட்டு…
மதநல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்துவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதக்குடி ஹஜ்ரத் நூர்முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்க்காவிற்கு புனரமைப்பு பணிக்காக ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கி தந்தமைக்கு பல்வேறு தரப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள தர்க்காக்கள் மதநல்லிணக்கத்தின் சின்னமான பரிணமித்து வருகின்றன. இத்தகைய தர்க்காக்களில் அடக்கமாகியுள்ள மகான்களை ஜாதி, மத பாகுபாடின்றி அனைவரும் வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாக தமிழகத்தில் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மத வேறுபாடின்றி அனைத்து வழிபாட்டு ஸ்தலங்களையும் புனரமைத்து பேணி பாதுகாக்கும் வகையில் பல கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி தந்து வருகிறார்.அந்த வகையில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட பொதக்குடி பகுதியில் அமைந்துள்ள தொன்மை சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹஜ்ரத் நூர்முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்க்கா சிதலம் அடைந்திருந்த நிலையினை கருத்தில்கொண்டு தமிழக முதல்வர் தர்க்காவின் புனரமைப்பு பணிக்காக ரூ.1.5 கோடி நிதியினை ஒதுக்கிதந்துள்ளார். இத்தகைய நிதியில் தமிழக அரசு முதல் தவணையாக விடுவித்த ரூ.52.50 லட்சத்திற்கான காசோலையினை தர்க்கா நிர்வாகிகளிடம் வழங்கியது. அந்த வகையில் பணி இன்று தொடங்கியுள்ளது பொறியாளர்கள் கட்டங்களை கட்டுவதற்கு அளவுகள் கணக்கிள் கொள்ளபட்டது பொதக்குடி பகுதி வாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்த இத்தகைய தர்க்கா புனரமைப்பு பணிக்கான நிதியினை வழங்கிய தமிழக முதல்வர் துணை முதல்வர் , தொழில்துறை அமைச்சர் உள்ளிட்டோர்க்கு நெஞ்சார நன்றியினையும், பாராட்டையும் தெரிவித்ததோடு, தர்க்காவின் புனரமைப்பு பணிக்காக பரிந்துரைசெய்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனிக்கும் நன்றி தெரிவித்தனர்.
