பாரம்பரிய வெள்ளை வேட்டிகள் மற்றும் உயர்தரப் பருத்தி ஆடைகளின் அடையாளமாகத் திகழும் ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனம், சென்னை அண்ணா நகரில் உள்ள விஆர் மாலில் (VR Mall) தனது புதிய பிரத்யேக ஷோரூமை மிக விமரிசையாகத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் கலாச்சார உடைகளை உலகத்தரம் வாய்ந்த நவீன வடிவமைப்புடன் வழங்கி வரும் ராம்ராஜ் காட்டன், சென்னை வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த நவீன விற்பனை நிலையத்தை அமைத்துள்ளது. இப்புதிய ஷோரூமை சென்னை அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன் ரிப்பன் வெட்டி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். விஆர் தக்ஷினி நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள் பிரிவின் இணை துணைத் தலைவர் பிரபாகரன் பொன்னுசாமி குத்துவிளக்கேற்றி விழாவைச் சிறப்பித்தார். கடையின் முதல் விற்பனையை கோரா பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாத் கோரா பெற்றுக் கொண்டார்.
இந்த நவீன ஷோரூமில், ராம்ராஜ் காட்டனின் புகழ்பெற்ற பார்டர் வேட்டிகள், கசங்காத ‘ரிங்கிள் ஃப்ரீ’ வேட்டிகள், வாசனை திரவியம் சேர்க்கப்பட்ட நறுமண வேட்டிகள், எம்பிராய்டரி மற்றும் மயில்கண் வேட்டிகள் எனப் பல வகைகள் அணிவகுக்கின்றன. விசேஷ நாட்களுக்கான பஞ்சகச்சம் மற்றும் பட்டு வேட்டிகள் உயர்தரப் பருத்தி மற்றும் பட்டு இழைகளால் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காட்டன் சட்டைகள், லினன் சட்டைகள், டிசைனர் ஒயிட் ஷர்ட்கள் மற்றும் வேட்டி-சட்டை செட்கள் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. இவை தவிர, பெண்களுக்கான பிரத்யேக காட்டன் மற்றும் பட்டுப் புடவைகள், லெக்கின்ஸ் மற்றும் உள்ளாடைகள், துண்டுகள், கைக்குட்டைகள் என ஒரே கூரையின் கீழ் முழு குடும்பத்திற்குமான ஆடைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இந்த ஷோரூம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய கிளைத் தொடக்கம் குறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனரும் தலைவருமான கே.ஆர். நாகராஜன் கூறுகையில், “அண்ணா நகர் விஆர் மாலில் எங்களது ஷோரூமைத் திறப்பதன் மூலம் சென்னையின் இதயப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இன்று குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் விரும்பி வரும் இடமாக மால்கள் மாறிவிட்டன. குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் நமது பாரம்பரிய ஆடைகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருவது ஆரோக்கியமான மாற்றமாகும். அவர்களின் ரசனைக்கேற்ப நவீன கால மாற்றங்களுடன் நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் தரமான ஆடைகளை வழங்குவதே எங்களின் முதன்மை நோக்கமாகும்” என்று தெரிவித்தார். 2026-ஆம் ஆண்டின் புதிய வரவுகளுடன் அண்ணா நகர் விஆர் மாலில் அமைந்துள்ள இந்த ஷோரூம், சென்னை வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
