July 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.09 கோடி வசூல்  5 கிலோ வெள்ளியும் சமர்ப்பணம்

by sowmiarajan
December 31, 2025
in News
A A
0
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.09 கோடி வசூல்  5 கிலோ வெள்ளியும் சமர்ப்பணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஆன்மீகப் புண்ணியத் தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், கடந்த ஒரு மாத காலத்தில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகை தந்து, அக்னி தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், 30 நாட்களுக்குப் பிறகு நேற்று கோயிலின் பல்வேறு சன்னதிகளில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் செல்லத்துரை நேரிடி மேற்பார்வையில், சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் பாதுகாப்பாகத் திறக்கப்பட்டு காணிக்கைகள் சேகரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சேகரிக்கப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் கோயிலின் கல்யாண மண்டபத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உதவி ஆணையர் ரவீந்திரன், கோயில் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் பேஸ்கார்கள் முன்னிலையில் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்றது. இப்பணியில் கோயில் ஊழியர்கள், சிவனடியார் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டனர். நாள் முழுவதும் நடைபெற்ற இந்த எண்ணிகையின் முடிவில், பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாகச் செலுத்திய ரொக்கப் பணம் மட்டும் மொத்தம் 2 கோடியே 09 லட்சத்து 80 ஆயிரத்து 165 ரூபாய் வசூலாகி உள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரொக்கப் பணம் தவிர, தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களையும் பக்தர்கள் தாராளமாகத் தானமாக வழங்கியுள்ளனர். அதன்படி, 85 கிராம் தங்கம் மற்றும் 5 கிலோ 100 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாகக் கிடைத்துள்ளன. கடந்த காலங்களை விடச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாலும், சபரிமலை சீசன் மற்றும் விடுமுறை நாட்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலாலும் இந்த முறை உண்டியல் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருவாய் அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கோயில் பராமரிப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: 5contribution Tamilkilogramsnaduoffering Silvertemple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விருதுநகரில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டிகள் கோலாகலத் தொடக்கம் அணிகள் களமிறங்கல்

Next Post

மயிலாடுதுறையில் காவிரியின் கிளை வாய்க்காலான பழங்காவிரி வாய்க்கால் MLA ராஜகுமார் நேரில் ஆய்வு

Related Posts

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ
News

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்
News

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

Bakthi

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

July 2, 2026
Next Post
மயிலாடுதுறையில் காவிரியின் கிளை வாய்க்காலான பழங்காவிரி வாய்க்கால் MLA ராஜகுமார் நேரில் ஆய்வு

மயிலாடுதுறையில் காவிரியின் கிளை வாய்க்காலான பழங்காவிரி வாய்க்கால் MLA ராஜகுமார் நேரில் ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

July 2, 2026
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

0
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

July 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.