தர்மபுரியில் நடைபெற்ற கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “பெருமைக்குரிய இந்த மண்ணில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். கட்சியில் செயல் தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்கியுள்ளேன். இந்த பொறுப்புக்கு தகுதியில்லை என்று சிலர் கூறியிருந்தாலும், அதை நான் பெரிய மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குகிறேன். அவர் கட்சியின் வளர்ச்சியையும் கவனிப்பார், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார். அவருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்,” என கூறினார்.
மேலும் ராமதாஸ், “பாமக என்பது நான் உருவாக்கிய கட்சி. அன்புமணிக்கும் கட்சியோடு இதற்கான நேரடி தொடர்பில்லை. 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிக்கான கூட்டணியை நான் அமைப்பேன்,” என்றும் தெரிவித்தார்.
 
			
















