ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜைகள் வெகுவிமர்சையாக நடைபெற்றது
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த கவரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 65 ஆம் ஆண்டு ராம நவமி உற்சவம் நிகழ்ச்சிஆலய நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஆலய வைக்கப்பட்டுள்ள பரிகார தெய்வங்களுக்கு ராமர் சீதை பெருமாள் சாமிகளுக்கு பல்வேறு மூலிகை கொண்டு அக்னி குண்டங்கள் அமைத்துயாகங்கள் வளர்க்கப்பட்டது
பின்பு ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனையும் நடைபெற்றன பின்பு ஆலயத்தில் அமைந்துள்ள 50 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு 10.008வடை மாலை மற்றும் மலர்களால் அபிஷேகம் செய்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சார்ந்த திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர் பின்பு அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன இன்று மாலை சீதாராமன் திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

















