“சைபர் தாக்குதல்களை தடுக்கும் அவசியத்தை ஆப்பரேஷன் சிந்தூர் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. அதனை எதிர்கொள்ள உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்,” என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதற்கு ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை சான்று. சைபர் ஸ்பேஸிலும் போர்கள் விரிவடைந்து வரும் நிலையில், இந்தியா அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது,” என்றார்.
மேலும், “இந்தியாவில் உருவாக்கப்படும் உள்நாட்டு ஆயுதங்கள் வெற்றியைப் பெற்றுள்ளன. ஜெட் என்ஜின்கள் உற்பத்தி செய்வதில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. எதிர்கால சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.