முதன் முறையாக 55 அடி நீள பிளக்ஸ்… ரஜினிக்கு கட் அவுட்டு

மதுரையில் ரஜினி ரசிகர்கள் ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாட்டம்.

தமிழகத்தில் முதன் முறையாக 55 அடி நீள பிளக்ஸ் பேனர் 25 இடங்களில் வைத்து அசத்தல், மூன்று தலைமுறைகளை கடந்து இன்றளவும் ரசிகர்களைக் கொண்ட ரஜினி – ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள திரைப்படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட தயாராகி வரும் ரசிகர்கள் – மதுரையில் ரஜினி பட போஸ்டருக்கு பல அபிஷேகம் செய்து கற்பூரம் காட்டி திருஷ்டி கழித்து கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்.

திரையுலகில் கருப்பு வெள்ளை திரைப்படம் தொடங்கி இன்றைய ai தொழில்நுட்பம் வரை மூன்று தலைமுறை கடந்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கின்றார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே, சினிமா அரசியல் திருவிழா என எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் மதுரையை மையமாக வைத்தேன் அதனுடைய வெற்றி தீர்மானிக்கப்படுகிறது கொண்டாட்டமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் துறையில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ள கூலி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரசிகர்கள் அதை கொண்டாடி மகிழ தயாராகி வருகின்றனர். படத்திலிருந்து ஏற்கனவே ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில்,

மதுரை அரசரடியிலிருந்து பெரியார் நோக்கி செல்லும் பிரதான சாலைப் பகுதியில் 55 அடி நீளத்திற்கு அன்று அவர் நடித்த காளி படத்தின் வரக்கூடிய காட்சியை பிரதிபலிக்கும் வண்ணமாகவும் தற்போது வெளியாக உள்ள கூலி படத்தில் அவர் நடித்த காட்சியையும் மையமாக வைத்து பிளக்ஸ் போஸ்டராக ஒட்டி அதில் ரஜினியின் உருவப்படத்திற்கு பாலபிஷேகம் செய்து கற்பூரமேற்றி தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்த நிலையில், கடவுளே ரஜினியே , மனிதக் கடவுள் ரஜினிகாந்த் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இறையுலகில் முடி சூடா மன்னன் ரஜினிகாந்த் என்று கோஷம் எழுப்பியவர் வண்ணக் காகிதங்களை பூ மலையாக பொழிய விட்ட நிலையில் கேக்கு வெட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும் கூலி திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக சூப்பர் ஸ்டாரின் படங்களில் வரக்கூடிய கதாபாத்திரங்களை போன்று தத்ரூபமாக வேடமிட்டு வரக்கூடிய வேளையில் இந்த ஆண்டு படம் வெற்றி பெற மன்சேசாசோறு சாப்பிட உள்ளதாகவும், படத்தில் வரக்கூடிய கதாபாத்திரத்தை போன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கக் கூடிய வகையில் ஒரு கதாபாத்திரத்தோடு முதல் நாள் முதல் காட்சிக்கு திரையரங்கிற்கு வர உள்ளதாக ரஜினி ரசிகர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மொத்தத்தில் கருப்பு வெள்ளை திரைப்படம் கலர் திரைப்படம் டிஜிட்டல் திரைப்படம் என மூன்று பரிணாமங்களிலும் மூன்று தலைமுறைகளையும் கடந்து ரசிகர்கள் கொண்டாட கூடிய ஒரு நடிகராக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரக்கூடிய திரைப்படத்தை ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

Exit mobile version