தமிழகத்தில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு; கோவை, நீலகிரிக்கு மஞ்சள் அலர்ட்

சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்கள் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. குறிப்பாக, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், காவிரி ஆறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் நிரம்பிய நிலையில் உள்ளன. இதனால் அணைகளின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில், இன்று முதல் மூன்று நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் முழுமையாக இன்று முதல் ஏழு நாட்கள் மிதமான மழை தொடரும் எனவும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version