திருவள்ளூர் அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தவிழாவை முன்னிட்டு ரேக்ளா குதிரை பந்தயப் போட்டி

திருவள்ளூர் அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த விழாவை முன்னிட்டு ரேக்ளா குதிரை பந்தயப் போட்டியை அமைச்சர் சாமு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் ஊராட்சியில் திமுக வடக்கு ஒன்றியம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ரேக்ளா குதிரை வளர்போர் நலச்சங்கம் சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு ரேக்ளா குதிரை வெள்ளோட்டம் விழா வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் புஜ்ஜி முரளி கிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சாமு.நாசர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரேக்ளா வெள்ளோட்டத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன இந்த போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் சிறிய குதிரைகள், 45 முதல் 46 வரை அங்குல உயர குதிரைகளுக்கு 12 மைல் தொலைவும், 47 முதல் 48 வரை அங்குல உயர குதிரைகளுக்கு 14 மைல் தொலைவும், பெரிய குதிரைகளுக்கு 16 மைல் தொலைவும் இலக்காக வைக்கப்பட்டிருந்தன. போட்டிகள் தொடங்கியதும் குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓட தொடங்கின. போட்டிகளில் வென்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ரேக்ளா குதிரை வளர்போர் நலச்சங்கத்தினர் மற்றும் திமுக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version