சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு;
பாட்டிலுக்கு பத்து ரூபாய் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் டாஸ்மாக்கில் விற்பனையாகிறது 150 கோடி ஊழல் நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 150 கோடி என்றால் வருடத்திற்கு 5400 கோடி ரூபாய் அரசு கஜானாவில் சேர வேண்டிய பணம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 5400 கோடியை அரசு கஜானாவில் சேர்ப்பதற்கு பதிலாக அவர் எஜமானாக இருக்கிற ஸ்டாலின் குடும்பத்தில் கொண்டு போய் 5400 கோடி ஆண்டுகளுக்கு சேர்க்கிற காரணத்தால் தான் திமுகவில் செந்தில் பாலாஜி தியாகியாக பார்க்கப்படுகிறார். 5400 கோடி ரூபாய் ஊழல் செய்து அரசு கஜானாவில் சேர வேண்டிய பணத்தை கொண்டு போய் உங்கள் வீட்டுக் கஜானாவில் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வைத்திருக்கிறீர்களே ஏழை எளிய சாமானிய மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளத்தை கொடுங்கள் என்றால் அது எங்கள் பொறுப்பல்ல டெல்லி தான் கவனிக்க வேண்டும் கை விரித்து இருக்கிறீர்களே அதுதான் வேதனை,
புரட்சித்தமிழர் எடப்பாடியார் மக்களுக்கான பணத்தை பெற்று தருவதற்காக ஆட்சி இல்லை அதிகாரம் இல்லை ஸ்டாலின் இடத்தில் முதலமைச்சர் பதவி உள்ளது 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆல் அம்பு சேனை அதிகாரம் முதலமைச்சர் அமைச்சர் எம்எல்ஏ எம்பி இருக்கிறது ஆனால் மக்கள் மீது அக்கறை இல்லாத காரணத்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளத்தைப் பெற்று தர யோக்கியதை இல்லாத அரசு.
எடப்பாடியார் அவர்களிடத்தில் முதலமைச்சர் பதவி இல்லை ஆனால் மக்கள் மீது அக்கறை இருக்கிற காரணத்தால் 2999 கோடியை தமிழகத்திற்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
கொரோனா காலத்தில் உலகமே ஸ்தம்பித்து போய் விட்டது மாணவ செல்வங்களுக்கு பரீட்சை எழுத முடியவில்லை, மன அழுத்தத்தில் உள்ளனர் நாங்கள் போய் முதலமைச்சர் இடம் கூறினோம், மன அழுத்தத்தில் உள்ளனர் சில பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலில் உள்ளனர். என தெரிவித்தோம் அதற்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் தமிழக அரசியல் வரலாற்றில் பேரிடர் வரும்போது என் பிள்ளைகள் படிக்க இயலவில்லை, என்றாலும் பரவாயில்லை பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்லவர்களாக வல்லவர்களாக ஆற்றல் உள்ளவர்களாக வர வேண்டும். என்று ஆல் பாஸ் போட்ட முதலமைச்சர் எடப்பாடியார்.
திருமங்கலம் தொகுதியில் சவால் விட்டு சொல்கிறேன் இது அதிமுக கோட்டை இரட்டை இலை கோட்டை எம் ஜி ஆர் விதைத்த விதை அம்மா வளர்த்த மரம் எடப்பாடியார் பாதுகாக்கிற இந்த ஆலமரத்தை எவராலும் தொட்டுப் பார்க்க முடியாது என சிறப்பு உரையாற்றினார்.