உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டினார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
புடின் தனது உரையில், “உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து முயற்சித்தது, இன்றைய உக்ரைன் மோதலின் முக்கிய காரணமாகும். இது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும். 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு கூட மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலால் நடந்தது,” எனக் குறிப்பிட்டார்.
பின்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய விருந்தில் புடின் கலந்து கொண்டார்.
மேலும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட போர் நிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது, ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக இந்தியா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான அழுத்தம் தந்தது போன்ற விடயங்களும் மாநாட்டில் முக்கிய ஆலோசனையாக எடுத்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
