புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் நகரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தீபன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ருசேந்திரகுமார் கலந்து கொண்டு, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது:
“புரட்சி பாரத இயக்கத்தை பலப்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும். அதன் முதல் கட்டமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் வளர்ச்சி மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது,” என்றார். மேலும்
“சதுரங்கத்தில் வெற்றி பெற்ற குகேஷுக்கு தமிழக அரசு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கியுள்ளது. ஆனால் கபடியில் வெற்றி பெற்ற கார்த்திகாவுக்கு வெறும் 25 லட்சம் மட்டுமே அளித்துள்ளது. இது வேதனை அளிப்பதாகவும். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்றதிராவிட மாடல் ஆட்சியில் சமூக நீதியின் பெயரில் இப்படி வேறுபாடு காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது.


















