சென்னை பாடிகுப்பம் அம்பேத்கர் நகரில் ஸ்ரீ பிரசன்ன சீனிவாச பெருமாள் சேவா சங்கம் சார்பில் 7 ஆம் ஆண்டு புரட்டாசி மாத விழாவும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி கே மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து 500க்கும் மேற்பட்டோருக்கான அன்னதானம் வழங்கினர். நீண்ட வரிசையில் இன்று பொதுமக்கள் அன்னதானத்தை பெற்றுக் கொண்டனர்.
