புதுச்சேரியில் 10% அதிகாரிகள் கூட முதலமைச்சர் ரங்கசாமி பேச்சைக் கேட்பதில்லை என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்
இது தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்…
புதுச்சேரி மாநில அதிமுகவும், அம்மா அறக்கட்டளையும் இணைந்து வருகிற 27-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மெகா வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளது என்றும்,
இந்த வேலை வாய்ப்பு முகாமில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெற்று தகுதியான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் பங்கேற்க பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் அதிகார மோதலினால் பல துறைகளில் பல மாதங்களாக துறை இயக்குநர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகளுக்கான அனுமதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினர்.
அரசு துறைகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலத்தோடு நிரப்பப்படாமல் உள்ளது.
ஆட்சியாளர்களின் மோதல் போக்கினால் எவ்வித நடவடிக்கையும் யார் மீதும் எடுக்க முடியாத நிலை உள்ளதை சில அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்,என்றும் மக்கள் பணிகளை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டாலும் 10% அதிகாரிகள் கூட முதலமைச்சர் ரங்கசாமி பேச்சை கேட்பதில்லை என்று வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த அரசு மீனவர்களுக்கு துரோகம் செய்து வருகிறது.
மீனவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர்ந்து செயல்படவில்லை என்றால்
இந்த அரசுக்கு எதிராக மீனவர்கள் வெகுண்டெழும் நாள் மிக விரைவில் வரும் என்று எச்சரித்தார்.