திருவாரூர் விளமல் தியாகராஜன் நகரில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பம் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவாரூர் விளமல் தியாகராஜன் நகரில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பம்..சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்..

திருவாரூரில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் விளமல் பகுதியில் இருந்து தியாகராஜா நகருக்கு செல்லும் சாலை உள்ளது..
இந்த சாலையின் வழியாக அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி அலுவலகம், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆகியவற்றுக்கு செல்ல வேண்டும். மேலும் அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளது.
இதனால் அப்பகுதியில் எந்த நேரத்திலும் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் நிலையில்.. சாலை ஓரத்தில் அமைந்துள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது..
மேலும் சாலையின் அருகே தனியார் மருத்துவமனை உள்ளது. சாய்ந்த மின் கம்பம் சாலையின் நடுவே அமைந்து உள்ளதால்..அப்பகுதியாக பள்ளி
வாகனங்கள் அப்பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வரும் நிலை உள்ளது..
பலத்த காற்று வீசும்போதோ கன மழை பெய்யும் போதோ மின் கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளதால்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை.. எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு முன்பாக சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்… என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version