சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட மதீனா நகரில் கழிவுநீர் & செப்டிக் டேங்க் நீரால் பொதுமக்கள் அவதி

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட மதீனா நகரில் குடியிருப்பு வளாகங்களில் இருந்து திறந்த வெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் நீரால் பொதுமக்கள் அவதி.துற்றாத்துடன் கொசுக்கள் பெறுகி நிலத்தடிநீரும் பாதிப்பு. நோய்தொற்றுக்கு ஆளான மக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட மதீனா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகரில் இயங்கும் குடியிருப்பு வளாகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு வளாகங்களில் இருந்து கழிவுநீர் மற்றும் செப்டிக் நீர் ஆகியவை முறையாக வெளியேற்றப்படாமல் திறந்தவெளியில் வெளியேற்றப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் குடியிருப்புகளை சுற்றி உள்ள தாழ்வான பகுதிகளில் கழிவு நீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஐந்து ஆண்டுகளாக கழிவுநீரும், செப்டிக் டேங்க் நீரும் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை பயன்படுத்துவதால் குழந்தைகள்,முதியவர்கள் பாதிக்கப்பட்டு நோய் தொற்றுக்கு ஆளாகி அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாத காரணமாக மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்து நிற்பதால் வீடுகளை விட்டு வெளியே வருவது முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். குடியிருப்பு வளாகங்களில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவது குறித்து சீர்காழி நகராட்சியில் 5 ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டும் பகுதி மக்கள் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் நீரை திறந்த வெளியில் வெளியேற்றும் குடியிருப்பு வளாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி:

01.தெய்வநாயகி.குடியிருப்புவாசி.மதீனாநகர்.சீர்காழி

02.பன்னீர்செல்வம்,நகர்வாசி.சீர்காழி.

Exit mobile version