திருப்பத்தூர் அருகே தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்! நடவடிக்கை எடுக்க விட்டால் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக எச்சரிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த
பெருமாபட்டு ஆதிகுட்டை கிராமத்தில் 150-க்கும் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,
கடந்த ஒன்பது வருடங்களாக
ஆதிக்குட்டை கிராமத்தில் உள்ள
சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் குருசிலாப்பட்டு-திருப்பத்தூர் பிரதான சாலையில் அமர்ந்து அரசு பேருந்தை சிறைப்பிடித்து
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த ஒன்பது வருடமாக சாலை குண்டும் குழியுமாக உள்ளது பல முறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இருப்பினும் மீண்டும் நடவடிக்கை எடுக்க விட்டால் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த குருசிலாப்பட்டு போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட நபர்களிடம் சமராச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பெயரில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
சாலை வசதி செய்து தரக்கோரி அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது…
