சோழர் காலத்தைச் சேர்ந்த1500ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயங்கள் திருப்பணி தொடங்குவதில் தாமதம் சங்கு ஊதி முற்றுகையிட்டு போராட்டம்

சோழர் காலத்தைச் சேர்ந்த,1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயங்கள் திருப்பணி தொடங்குவதில் தாமதம் ஏற்படுத்தும் இந்து அறநிலைய ஆட்சித் துறையை இணை ஆணையர் அலுவலகத்தை சங்கு ஊதி முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது :-

மயிலாடுதுறை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தைச் சார்ந்த கஞ்சனூர் சுயம் பிரகாசர் ஆலயம், மாங்குடி சிவலோகநாதர் ஆலயம் சூரியனார் கோயில் சுக்கிரன் கோயில் மற்றும் ஏரகரம் கந்தசாமி கோயில் ஆகியவை திருப்பணி செய்யப்படாமல் உள்ளன. இதனால் கோயில்கள் சிதிலமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதற்கான திருப்பணி தொடங்காமல் இந்து சமய அறநிலை துறை காலம் தாழ்த்தி வருகிறது. திருப்பணிகளை உடனடியாக துவங்க வலியுறுத்தி அகில பாரத இந்து மகாசபா சார்பில் இன்று மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் அமைந்துள்ள இணை ஆணையர் அலுவலகதை சங்கு ஊதி முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அகில பாரத இந்து மகா சபாவின் மாநில பொதுச் செயலாளர் ராம நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பங்கேற்று சங்கு ஊதியபடி ஊர்வலமாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version