அடிக்கல் நாட்டு விழாவிற்கு அமைச்சர்கள் வரும் நிலையில் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் மறித்து போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழறிஞர் சீகன் பால்கு அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா இன்று மாலையில் நடைபெற உள்ளது தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ள நிலையில் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் தமிழறிஞர் சீகன் பால்கு அவர்களுக்கு சிலைடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தரங்கம்பாடி கடைவீதியில் மீனவர்கள் வணிகர்கள் பொதுமக்கள் காலையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர் இருப்பினும் பொறையார் பகுதியில் மணிமண்டபம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்துவதற்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திடீரென அந்த பகுதியில் எதிர்ப்பு தெரிவித்து அந்த சாலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பரபரப்பு போலீசார் குவிப்பு.















