கன்னியாகுமரி மாவட்டம்: அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாணை என் ஐந்தின்படி 11.01.2021 அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியத்தின் நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கைகளுடன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தால் மாணவர்களின் மீதான கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக 70 தொகையை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
