மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின் சீனிவாசனை சாதிபெயரைசொல்லிதிட்டிய சமூகவிரோதிகளைகைதுசெய்யஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசனை ஒருமையில் பேசி திட்டியும் சாதி பெயரை சொல்லி திட்டிய சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டுமென கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிளையாட்டம் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் அடிப்படை தேவைகள் செய்து தர வேண்டி நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பி சீனிவாசன் கலந்து கொண்டார்.

குமாரமங்கலத்திற்கு அருகே நல்லடயை சார்ந்த கண்ணன் செல்வம் ரவி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியவர்களை ஒருமையில் பேசியும் சாதி பெயரை சொல்லி திட்டியதாக திட்டியதாகவும் மாவட்ட செயலாளர் சீனிவாசனை ஒருமையில் பேசியதை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாதிப் பெயரை சொல்லி திட்டியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் ஒருமையில் பேசிய மூவரையும் கைது செய்து எஸ் சி எஸ் டி வழக்கு பதிய வேண்டும் என கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version