சின்ன பள்ளிவாசல் தெருவில் நகராட்சி கடந்த பல மாதங்களாக பொதுமக்கள் கொட்டிய குப்பையை அள்ளாத காரணத்தால் முஸ்லிம்கள் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்ததை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பேச்சுவார்த்தையால் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில் ரம்ஜான் தினத்தன்று முஸ்லிம்கள் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டனர் ஆர்பாட்டத்திற்கு முஸ்லிம் இளைஞர் மன்ற தலைவர் சதகத்துல்லா தலைமை வகித்தார்.அப்போது சின்ன பள்ளிவாசல் தெருவில் நகராட்சி நிர்வாகம் குப்பையை அகற்றாமலும், தேங்கி கிடக்கும் குப்பைகளையும் பல மாதங்களாக அள்ளவில்லை.இதனை முஸ்லிம் ஜமாத்தார்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனை கண்டித்து ஜமாத் இளைஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டனர் சம்பவம் அறிந்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஜமாத் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தாமல் முஸ்லிம் இளைஞர்கள் கைவிட்டனர்.அப்போது ஜமாத் முன்னாள் நாட்டான்மை ஜமிலுதீன். பஞ்சாயத்தார்கள் இக்பால்,குட்டி தம்பி, கூறை அப்துல்காதர் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.













