திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் முசிறியம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஒன்றியக் குழு உறுப்பினர் என்.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகத்திடமும், ஒன்றிய நிர்வாகத்திடமும் பலமுறை வலியுறுத்திய திட்டாணிமுட்டம் நடுத்தெரு, தெற்கு தெரு, கேணிக்கரை சாலைகளை செப்பனிடக்கோரியும், திட்டணி முட்டம் சுடுகாட்டு சாலை, திட்டணிமுட்டம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முதல் வெண்ணாறு இணைப்புச் சாலையை சீரமைத்து தரக்கோரியும் மேலும் திட்டணிமுட்டம் பகுதியில் நவீன சமுதாயக்கூடம் அமைத்திட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், வி.சா மாவட்ட தலைவர் தம்பு சாமி, கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கோபி ராஜ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோரிக்கைகளை விளக்கியும் கண்டன உரை நிகழ்த்தினார்.













