பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், முசாபராபாத் பகுதியில், அவாமி அதிரடி குழு அமைப்பின் தலைமையில் கடந்த 72 மணி நேரமாக பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் சந்தைகள், கடைகள் மூடப்பட்டு, போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த சூழலில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் காரணமாக அந்த பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.
கடந்த வாரம், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பாகவே இப்போராட்டங்கள் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.