கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தமிழக அரசை கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டனஆர்ப்பாட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணி தலைவி சுதா எழில் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்று பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்

Exit mobile version