மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சி சார்பில் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம். 100 நாள் திட்டத்தில் கோரிக்கை

மத்திய அரசை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் தி.மு.க., கூட்டணி கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை சிதைத்ததோடு, இந்த திட்ட பணிகளை சீர்குலைத்து நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளனர். மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து இந்த திட்டத்தை முடக்கியதோடு, வேலை நாட்களை குறைத்து, பயனாளிகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளனர். காந்தியின் பெயரை நீக்கி, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியதோடு, நுாறு நாள் பணியே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க துடிக்கும் பா.ஜ., அரசின் செயலை கண்டிப்பது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி பங்கேற்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய l செயலாளர் தமிழ்மணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Exit mobile version